மார்கழியில் பாடப்படும் திருப்பாவையில், ஆண்டாள் ஒவ்வொரு பாடலையும் ஏலோர் எம்பாவாய் என பாடி முடிப்பாள். இதை ஏல் + ஓர் + எம்பாவாய் என பிரிப்பர். இந்த சொல்லுக்கு அன்பிற்குரிய தோழியே என்பது பொருள். மற்றொரு விளக்கப்படி ஏல் என்றால் ஏற்றுக்கொள் என்றும், ஓர் என்றால் யோசித்துப்பார் என்றும் பொருள் உண்டு. மார்கழி அதிகாலையில் தாமதிக்காமல் எழ இந்த சொல்லை பயன்படுத்தினர். அதிகாலை 4:00 மணிக்கு எழுந்தால் கண்ணனின் அருள் கிடைக்கும். இதை நன்றாக யோசிக்கும்படி தோழிகள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதே இதன் விளக்கம்.