அதிருத்ர மகா யக்ஞ கமிட்டி சார்பில் மதுரையில் மகா பெரியவா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2017 12:12
மதுரை : மதுரை அதிருத்ர மகா யக்ஞ கமிட்டி சார்பில், சத்குரு சங்கீத சமாஜத்தில் மார்கழி பக்தி திருவிழா டிச., 30 வரை நடக்கிறது. விழாவில் நேற்று சென்னை கலாமித்ரா குழுவினரின் மகா பெரியவா நாடகம் நடந்தது. இதில் 20 நடிகர்கள், நுாறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் தோன்றி காஞ்சி பெரியவர் மகிமைகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினர். காஞ்சி பெரியவர் கதாபாத்திரத்தில் வந்த ராம்கி, நடித்தார் என சொல்வதை விட வாழ்ந்து காட்டினார் என சொல்லலாம். 14வது முறையாக மதுரையில் அரங்கேறிய இந்நாடகத்தை பார்க்க வந்த ரசிகர்கள் அனைவரும் பக்தர்களாக மாறி வீடு திரும்பினர். இன்று மாலை 6:30 மணிக்கு சவிதா ஸ்ரீராம் குழுவினரின் அபங்க நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.