கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் அருகே, ஐயப்பன் கோவில் கட்டுமான பணி மும்முரமாக நடக்கிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூரில், காவிரிக் கரையில் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இப்பழைய கோவிலை அகற்றி, புதிதாக கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன் படி, 95 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டுமானப் பணி நடக்கிறது. கிரானைட் கற்கள் கொண்டு கட்டடம் கட்ட, நாமக்கல் பகுதியில் இருந்து, நேற்று புதிய வரிக் கற்கள் கொண்டு வரப்பட்டன. கோவில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடக்கின்றன.