அழகியநாதேஸ்வரர் கோவிலை பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2017 01:12
கண்டாச்சிபுரம்: காணை அடுத்த கெடார் அழகியநாதேஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணை ஒன்றியம், கெடார் கிராமத்தில், பல நுாறாண்டுகளுக்கு முந்தைய பெரிய நாயகி சமேத அழகியநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தற்போது இக்கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்குள்ள மூலவர், ஆறுமுக சுவாமிகள் மற்றும் வள்ளி, தெய்வானை, அம்பாள் சிலைகள் மிகத்தொன்மை வாய்ந்தவை. இடிந்த நிலையில் உள்ள சுற்றுப்பிரகார சுவர்களில், தொன்மையான சிற்பவேலைகள் நிறைந்துள்ளன. தற்போது, பிரதோஷம் மற்றும் மாத சிவாரத்திரி போன்ற பூஜைகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பற்ற நிலையில் உள்ள, இக்கோவிலை புனரமைப்பு செய்ய, தொல்லியல் துறையுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோவிலின் தொன்மையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்,பக்தர்கள் தரப்பில், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.