பதிவு செய்த நாள்
27
டிச
2017
12:12
சூலூர்: மண்டல மகர விளக்கு பூஜையை ஒட்டி, சூலூரின் முக்கிய வீதிகள் வழியாக, ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது.சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில், கடந்த, செப்., 16ம் தேதி மண்டல மகர விளக்கு பூஜை துவங்கியது.
26ம்தேதி அகண்ட நாம ஜபமும், அன்னதானமும் நடந்தது. தினந்தோறும் நடனம், சொற்பொழி வு, வில்லுப்பாட்டு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. 22, 23ம் தேதிகளில் நெல், அரிசி, அவல், மஞ்சள், சர்க்கரை, நெல்பொரி பறையெடுப்பு நடந்தது.24ம்தேதி மாலை, 4:30 மணிக்கு பஞ்ச வாத்தியம் முழங்க, ஐயப்ப சுவாமியின் அலங்கார ஊர்வலம், காங்கயம்பாளையம் பகுதியில் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, சூலூர் கலங்கல் ரோடு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, செண் டை வாத்தியங்கள் முழங்க, இரண்டாம் நாள் ஊர்வலம் துவங்கியது. சிறப்பு அலங் காரத்தில் சுவாமி யானை மீது அமர்ந்து, பவனி வந்து அருள்பாலித்தார்.
சீரணி கலையரங்கம், பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் காங்கயம்பாளையம் கோவிலை
வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் சரண கோஷமிட்டபடி பங்கேற்றனர்.
நேற்று நிறைமாலை, சுற்றுவிளக்கு, மண்டல பூஜை நடந்தது.