பதிவு செய்த நாள்
27
டிச
2017
01:12
ஈரோடு: மாரியம்மன் கோவில் திருவிழாவில், பறவை காவடி அலகு குத்தி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், பொங்கல் விழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் சார்பில், திருவிழா தீர்த்தம், அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. வைராபாளையம் காவிரி ஆற்றில், சூரிய வழிபாடு, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிக்கு பின், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டியிருந்த பக்தர்கள், நாக்கு அலகு, மயில் காவடி அலகு, வேல் அலகு, கத்தி அலகு, பறவைகாவடி அலகு குத்தி, கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். வைராபாளையம், பவானி ரோடு, அசோகபுரம் ரோடு, தெப்பக்குளம் வீதி, சத்தி ரோடு வழியாக, கோவிலை ஊர்வலம் அடைந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விதவிதமான அலகு குத்திச் சென்ற பக்தர்களை, மக்கள் வியப்புடன் பார்த்தனர்.