பதிவு செய்த நாள்
28
டிச
2017
11:12
பல்லடம் : ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த பூவோடு மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையத்தில், ஸ்ரீ விநாயகர், மாரியம்மன், காமாட்சி, துர்க்கை, மற்றும் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொங்கல் விழா, கடந்த, 23ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி, கம்பல் போடுதல் , படைக்கலம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, பூவோடு, மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள், பக்தியுடன் பூவோடு எடுத்து வந்தனர். கோவிலில் துவங்கி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக, பூவோடு, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.இதில், நூற்றுக்கணக்கான பெண்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து, நேற்று மாவிளக்கு பூஜையும், உச்சிகால பூஜை, மாலை, 4:00 மணிக்கு தேர் குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றன.