லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2017 02:12
புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 29ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி தினமான, நாளை 29ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு, லட்சுமி ஹயக்ரீவர் தரிசனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள், லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் பக்த ஜன சபா மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.