பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (டிச.29) காலை 7:05 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கபட்டு பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் வேதவிண்ணப்பமாகி மூலஸ்தினத்திலிருந்து புறப்படுகிறார்கள். சிறப்பு பூஜைகள் முடிந்தபின் காலை 7:05 மணிக்கு ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே எழுந்தருளும் அவர்களை ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவிக்கின்றனர். பின்னர் மாடவீதி, கந்தாடை வீதி வழியாக ராப்பத்து மண்டபத்திற்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் எழுந்தருள்கிறார்கள். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், அரையர் வியாக்யானம், சேவாகாலம் மற்றும் கோஷ்டி நடைபெற,மாலை 4:00 மணிக்கு ஆண்டாள்,ரெங்கமன்னார் புறப்பட்டு ஆஸ்தானம் செல்கின்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் செய்துள்ளனர்.