பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
ராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணி யார் சர்ச்சில் பிப்.,23, 24ல் கொடியேற்றத்துடன் திருவிழா நடக்க உள்ளதால், தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 22 கி.மீ., துாரத்தில் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சதீவு அந்தோணியார் சர்ச், இந்திய, இலங்கை மீனவர்கள்பாரம்பரியமாக வழிபாடு செய்து, திருவிழாவில் இருநாடு மீனவர் குடும்பத்தினரும் பங்கேற்பர். இலங்கையில் விடுதலைப்புலிகள், ராணுவம்இடையே போர் தீவிரமடைந்ததால், பாதுகாப்பு காரணமாக 1984ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழாவுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. பின், 2009ல் இலங்கையில் அமைதி திரும்பியதும், கச்சத்தீவில் மீண்டும் திருவிழா நடத்த இலங்கை அரசு அனுமதித்தது. அதன்படி 2010ல் நடந்த கச்சத்தீவு விழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 70 விசை, நாட்டுபடகில் 2400 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் 2016ல் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை, இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டு கொன்றதை கண்டித்து, கச்சதீவு விழாவுக்குசெல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில், வரும் பிப்.,23ல் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச்சில் திருவிழா கொடி ஏற்றி, பிப்.,24ல் திருவிழா திருப்பலி பூஜை நடக்க உள்ளது என யாழ்பாணம் மறைமாவட்ட பிஷப் ஜஸ்டின் ஞானபிரகாசத்தின் செயலாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.