பதிவு செய்த நாள்
29
டிச
2017
01:12
கும்மிடிப்பூண்டி : பஞ்செட்டி, அகத்தீஸ்வரர் கோவிலில், நாளை மாலை, இந்த ஆண்டின் கடைசி சனி பிரதோஷ விழா நடைபெற உள்ளது. கவரைப்பேட்டை அடுத்த, பஞ்செட்டியில், ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள சுயம்பு லிங்கத்தை, அகத்திய முனிவர் பல காலமாக வழிபாடு செய்ததால், அகத்தீஸ்வரர் என, பெயர் ஏற்பட்டது. பிரதோஷ மகிமை கொண்ட, பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் பஞ்செட்டியும் ஒன்றாகும். இந்த ஆண்டின் கடைசி, சனி பிரதோஷத்தை முன்னிட்டு, பஞ்செட்டி கோவிலில், நாளை மாலை நடைபெறும் பிரதோஷ விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுகின்றன. அதே போல, கவரைப்பேட்டை அருகே, வரலாற்று சிறப்புமிக்க, அரியதுரை வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரர், கும்மிடிப்பூண்டி, எஸ்.பி., முனுசாமி நகரில் உள்ள, வில்வநாதீஸ்வரர் ஆகிய கோவில்களிலும், நாளை மாலை, சனி பிரதோஷ விழா நடைபெற உள்ளது.