பதிவு செய்த நாள்
29
டிச
2017
02:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஜன., 1 முதல், 5 வரை, 12 ஜோதிர்லிங்க தரிசனம் நடக்கிறது என, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட பிரம்ம குமாரிகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இயக்கத்தை சேர்ந்த ராதாம்மா மற்றும் தமிழக செய்தி தொடர்பாளர் சுந்தரேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் மகாலில், ஜன., 1 முதல், 5 வரை, 12 ஜோதிர்லிங்கங்கள் தத்ரூபமாக தரிசனத்திற்கு வைக்கப்பட உள்ளன. தினமும் காலை, 9:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை தரிசனம் செய்யலாம். தியானப் பயிற்சி, கலை நிகழ்ச்சிகள், விளக்கு பூஜை, கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.