பதிவு செய்த நாள்
30
டிச
2017
10:12
திருப்பதி: திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தங்கத் தேர் புறப்பாடு நடந்தது.
திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று, ஆண்டுதோறும், தங்கத் தேர் புறப்பாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, மலையப்ப ஸ்வாமி, ஸ்ரீதேவி - பூதேவியுடன், தங்கத் தேரில் மாட வீதியில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள், தங்கத் தேரை, வடம் பிடித்து இழுத்தனர்; ஆரத்தி அளித்து வழிபட்டனர்.
தேர் புறப்பாடு முடிந்த பின், மலையப்பஸ்வாமி, வாகன மண்டபத்தில், பக்தர்களின் தரிசன த்திற்காக வைக்கப்பட்டார். கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை காண முடியாத பக்த ர்கள், உற்சவ மூர்த்திகளை வணங்கி சென்றனர்.
செயற்கை வைகுண்ட வாயில் திருமலைக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்லக் கூடா து என்று, தேவஸ்தானம் இந்தாண்டு ஏழுமலையான் கோவில் அருகில், வைகுண்டம் போன்ற தோற்றத்தை அமைத்து, அதில் பாற்கடலில், ஆதிசேஷன் மேல் மகா விஷ்ணுவும், மகாலட்சு மியும் இருப்பது போன்ற சிலையை அமைத்துள்ளது. பெரும் திரளான பக்தர்கள், இதைக் கண்டுகளித்தனர்.