பதிவு செய்த நாள்
30
டிச
2017
10:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கடந்த, 18ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது.
இதன் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, நேற்று அதிகாலை, நடந்தது. அதிகாலை, 3:45 மணிக்கு, நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண் டை, கிளி மாலை மற்றும் திரு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார். விரஜா நதி மண்டபத்தில், பட்டர்களின் வேத விண்ணப்பங்களை கேட்டருளிய நம்பெருமாள், ராஜமகேந்திரன் சுற்று, நாழிகேட்டான் வாசல் வழியாக, குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி, சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலுக்கு சென்றார்.
அதிகாலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டவுடன், பக்தர்களின், கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன், நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து, அகலங்கன் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மணடபத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் எழுந்தருளினார்.
காலை, 7:30 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந் தருளிய நம்பெருமாள், நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 10:00 மணி வரை, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒரே ஆண்டில் இரண்டு முறை ஆண்டுதோறும் மார்கழி மாதம் வளர்பிறை துவங்கிய, 11ம் நாளில், அத்யயனம் என்றழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டா டப்படுகிறது.
அதில், பகல் பத்து உற்சவம் முடிந்து, ராப்பத்து உற்சவம் துவக்க நாளில், சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
ஏற்கனவே, இந்த ஆண்டு, ஜனவரி 8ல், வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
நவதிருப்பதியில் பக்தர்கள் தரிசனம் வைகுண்ட ஏகாதசியான நேற்று, தூத்துக்குடி மாவட் டத்தில், பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இரவு, 7:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. தொடர்ந்து, நத்தம் ஸ்ரீவரகுணமங்கை கோவில், திருப்புளியங்குடி காய்சின வேந்த பெருமாள், பெருங்குளம் மாயகூத்த பெருமாள், இரட்டை திருப்பதி கோவி ல்கள், திருக்கோளூர் நித்யபவித்தரன் ஆகிய கோவில்களில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் கோவிலில், நள்ளிரவு, 1:00 மணிக்கும், பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்ற பிரான் கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வையொட்டி, நவதி ருப்பதி கோவில்களில் அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பகதர்கள் தரிசனம் செய்தனர்.