திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 02:12
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இக்கோயிலில் கடந்த டிச.,16 முதல் திருப்பள்ளி எழுச்சி உற்ஸவம் நடைபெற்று வருகிறது. தினசரி காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் பெருமாள் தேவியருடன் எழுந்தருளினார். காலை 8:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் தேவியருடன் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் பக்தர்கள் தொடர்ந்து பெருமாளை வழிபட்டனர். மாலையில் ஆலம்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது.
திருத்தளிநாதர் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு யோகநாராயணப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து உற்ஸவ பெருமாள் திருநாள் மண்டபத்தில் எழந்தருளினார்.பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன. பின்னர் பரமபத வாசலைபெருமாள் கடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் அழகிய மணவாள பெருமாள் கோயிலில் காலை 8:30 மணி அளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு தேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். தொடர்ந்து உற்ஸவர் பிரகார வலம் வந்தார்.
* சிவகங்கை சுந்தரராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
காலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பரமபதவாசலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.
* மானாமதுரை வீர அழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சர்வ அலங்காரங்களுடன் சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் வழியாக அதிகாலை 5:20 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
பின்னர் சுவாமி கோயிலை வலம் வந்து மண்டபத்தில் சிறப்பு பூஜை, தீபஆராதன நடைபெ ற்றன.