பதிவு செய்த நாள்
30
டிச
2017
04:12
கரூர்: ஆங்கிலப் புத்தாண்டு அன்று, நள்ளிரவு கோவிலை திறந்து வழிபாடு செய்தால்,
முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என, இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.
கரூர் நகர இந்து முன்னணி செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது, தமிழர் கலாச்சாரம் கிடையாது. அன்று, நள்ளிரவு கோவிலை திறந்து வழிபாடு நடத்துவது வேதனையாக உள்ளது. வரும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று, நள்ளிரவில் கோவிலை திறந்து பூஜை நடத்தினால், முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் சக்தி, நகர தலைவர் ஜெயம் கணேஷ், நிர்வாகிகள் செந்தில் குமார், சிவகுமார், காமேஸ்வரன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.