பதிவு செய்த நாள்
04
ஜன
2018
02:01
பவானி: பவானி, காளிங்கராயன்பாளையம் மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்தது. பவானியில் இருந்து, ஈரோடு செல்லும் மெயின் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம், 19ல் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. 26ல், கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். பொங்கல் திருவிழாவில் பவானி, காளிங்கராயன்பாளையம், அணைநாசுவம்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், லட்சுமிநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு, 8:00 மணியளவில் கம்பம் பிடுங்குதலும், 5ல் மஞ்சள் நீராட்டுதலும், 8ல், அம்மன் திருவீதி உலாவுடன் முடிவு பெறுகிறது.