Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதிரை விரதம் இருப்பது எப்படி? மூலஸ்தானத்தில் ஆமை மூலஸ்தானத்தில் ஆமை
முதல் பக்கம் » துளிகள்
பிரம்மாஸ்திரத்தை வீழ்த்திய ராம நாமம்!
எழுத்தின் அளவு:
பிரம்மாஸ்திரத்தை வீழ்த்திய ராம நாமம்!

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
05:01

ராமனைப் பற்றி எழுதும் போது ஒரு ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடப்படுவது உண்டு. அது நீலகண்டனால் உமையம்மைக்கு எடுத்துரைக்கப்பட்டதாகும். அதை உச்சாடனம் செய்வதால் ஜெயமேற்படும், மங்களம் உண்டாகும், பிறவிப் பயனைப் பெறலாம், வாழ்வில் நன்மை பயக்கும், அதுதான் ராம மந்திரம்.

அழகிய முகமுடைய பர்வதராஜ புத்திரி! யாம் எப்போதும் ராம, ராம, ராம என்ற புண்ணியமிக்க மந்திரத்தை மனனம் புரிவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்று கேட்பாயானால் அப்படி ஜபிப்பதால் மாதவனின் ஆயிரம் பெயர்களையும் முறையாகச் சொல்வதற்குச் சமமாகும்! என்றுரைக்கிறார் கைலைநாதர், இதிலிருந்தே அந்த ராம மந்திரத்தின் மகிமையை உணரலாம். அந்த மந்திரம் -

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

இதன் பொருள்: (ராம, ராம = ராம, ராமேதி = இந்த ராம எனும் பெயர், ரமே =மகிழ்ச்சியடைகிறேன், ராமே =பெயரைத் தியானிப்பதில், மனோரமே = ஆழ்நிலை தியானத்தில் மன நிறைவு தருகிற, சகஸ்ரநாம = விஷ்ணுவின் 1000 பெயர்களை, தத்துல்யம் = சொல்வதற்கு ஈடாகும். ராம நாம = பவித்திரமான ராமசந்திர மூர்த்தியின் ராம எனும் பெயர், வர = அழகிய, ஆனனே = முகம், கொண்டவனே)

இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது கீழ்வரும் சம்பவம்: ஒரு மரத்துக்குப் பல கிளைகள் பரந்து விரிந்து இருப்பது போல் இதிகாசப் புராணங்களிலும் அதன் கதாபாத்திரங்களைப் பற்றிய மேல் விவரங்களும், கிளைக் கதைகளும் விரவிக் கிடப்பதைக் காணலாம். ராமபக்த அனுமன் சம்பந்தமுடைய பல சுவாரசியமான நிகழ்வுகள் விவரிக்கப்படுவதையும் படிக்கலாம். சுயநலமற்ற செயல்பாடுகளால் தன் தானைத் தலைவன் ராமச்சந்திர மூர்த்தியாலேயே சிரஞ்சீவியாகத் திகழ வரம் பெற்றவர். திரேதா யுகத்தில் ராமநாமம் ஜபித்தவாறு ராமனுக்குத் தாசனாய் இருந்தவர். துவாபரயுகத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுடனிருந்து அதே பாக்கியத்தைப் பெற்றவர்; கலியுகத்திலும் ராமகாதை பிரவசனம் செய்யுமிடத்திலும், ராமநாமம் கேட்குமிடமெல்லாம் ராமனை நேரில் தரிசிக்க முயற்சித்துச் சுற்றிச் சுற்றி வருகிறார். அப்படிப் பட்ட மாருதிராயனை ஒருமுறை சோதிக்க எண்ணினார் மூவுலகைச் சுற்றும் விசேஷ தேவதூதர் நாரதமுனி.

இலங்கை யுத்தம் முடிந்து அயோத்தி நகர் திரும்பிய ராமர், வெற்றி விழா மற்றும் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு அரச சபையில் ரிஷி, முனிவர்கள் கூடியிருந்தனர். நாராயண, நாராயண என்ற கோஷத்துடன் நாரதரும் வந்து சேர்ந்தார். அனைத்து மகான்களையும் வணங்கியவரின் பார்வை, பவ்யமாக அங்கு நின்றிருந்த ஆஞ்சநேயரின் மீது விழுந்தது. சோழியன் குடுமிசும்மா ஆடாதே! குறும்புச் சிரிப்புடன் நெருங்கியவர், அஞ்சனை மைந்தா, போர்க்களத்தில் தசரதராமனுக்கு நீ ஆற்றியப் பணி மிகச் சிறப்பானது, இதோ இங்கே குழுமியிருக்கும் மகான்களிடம் ஆசி பெற்றுக் கொண்டாயா, இல்லையா? என்று வினவியவர் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தனர். அதற்குத்தான் காத்திருக்கிறேன் தாங்களும் வந்து சேர்ந்துவிட்டீர், தேவ ரிஷி! இதோ போகிறேன் என நகரலானான் அனுமன். கொஞ்சம் பொறு, ஆஞ்சநேயா! அவசரப் படாமல் நான் சொல்வதைக் கவனமுடன் கேட்டு விட்டுச் செல்! என்றவர் மேலும் கூறலானார். அனைவரையும் வணங்கி ஆசி பெற்றுக்கொள், ஆனால் ஒருவரை மட்டும் நீ தவிர்க்க வேண்டும். அதோ வலப்புறம் தனியாக அமர்ந்திருக்கும் ராஜரிஷி விஸ்வாமித்திரரே அவர் மறந்து விடாதே! என்றார்.

முனிவரே! இதென்ன தர்ம சங்கடம், இது அபசாரமில்லையா? என் பிரபுவின் குருநாதர் அல்லவா அவர்? பிரபு என்ன நினைப்பார்? எனத் திகைப்புடன் கேட்டான். கவலைப்படாதே! நான் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. அவருக்குரிய ராஜ மரியாதையைப் பிறகு அளிக்கலாம். முதலில் மற்றவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்! எனக் கூறி அவனை அனுப்பி வைத்தார். அனுமனும் அவ்வாறே செய்து முடித்தான். விஸ்வாமித்திரர் சிறிதும் சலனப்படவில்லை. ஆனால் அவர் தனிமையில் இருக்கையில் நாரதர் அவரிடம் அனுமனின் அடாத நடவடிக்கையை எடுத்துக் கூறி மகரிஷிக்குச் சினமேற்பட வைத்து, நன்றாகச் சிண்டு முடியும் வேலையையும் கனகச்சிதமாகச் செய்து விட்டார் ராமனிடம் இதைச் சொன்ன ரிஷி, ஆஞ்சநேயருக்குத் தகுந்த படிப்பினை வழங்க உத்தரவிட்டார். தர்மம், நீதியை நிலைநாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்ட ராமன், தன் குருவுக்கு நேர்ந்த மரியாதைக் குறைவுக்கு மரணதண்டனையே ஏற்றது எனத் தீர்மானித்து, அனுமனை அம்பெய்து கொல்ல ஆணையிட்டான்.

சற்றும் சிந்திக்காமல் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தான் நடந்து கொண்டு விட்டதை எண்ணி வருத்த முற்ற ஆஞ்சநேயர், ராமச்சந்திர பிரபுவின் பாதங்களைச் சரணடைவதே உகந்தது என்று கருதி ராம, ராம, ராம எனத் தியானிக்கத் தொடங்கினார். அந்தத் தெய்வீக ஒலி எங்கும் வியாபித்தது. வில்லாளிகளின் கூரிய கணைகள் அனுமனுக்குத் தீங்கொன்றும் இழைக்க முடியாமல் மழுங்கி வீழ்ந்தன! முடிவில் தாசனுக்குத் தானே தண்டனை வழங்க முன் வந்தார் ராமன். முன்னாளில் வாலியைக் கொன்ற அவரது அம்புகள் இப்போது மாருதியின் முன் செயலிழந்து போயின. ராமன் சற்று திகைத்துதான் போனார். ஒரு முடிவுக்கு வந்தவர் குரு விஸ்வாமித்ரரின் அனுமதி பெற்றுப் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தார். அனுமன் உச்சரித்த ராமநாம மந்திர ஒலி அதிர்வலைகளுக்கு முன், பயங்கர அழிவை உண்டாக்கும் அந்த அஸ்திரம் கட்டுண்டு நின்று அதில் அமிழ்ந்தும் போயிற்று! பிரம்மாஸ்திரத்தை வலுவிழக்க வைக்கும் பிரம்மசீர்ஷ அஸ்திரம், அதையும் முறியடிக்கும் பிரம்மாண்ட அஸ்திரம் ஆகியவற்றுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்பது நிதரிசனமாகப் புரிந்து விட்டது.

ராம் என்ற மந்திர ஒலி அதிர்வுகள் அனுமனை அரண்போல் காத்து நின்றன என்பதே உண்மை! நமக்கு இப்படிப்பட்ட ஒரு தாசனா என்று நெகிழ்ந்து விட்ட ராமன் அனுமனை ஆரத் தழுவிக் கொண்டார். தன்னை வணங்கிய ஆஞ்சநேயருக்கு மனமுவந்து ஆசி வழங்கினார். கவுசிகர் இதுவரை குழந்தையைக் கிள்ளி வேடிக்கைப் பார்த்த நாரதர் முனி, இப்போது தொட்டிலை ஆட்டிச் சமாதானம் செய்யும் நோக்கில் ராஜரிஷியை அணுகித் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். நாரதரே! கலகமூட்டி நன்மை செய்து வைத்ததில் உமக்கு இப்போது திருப்திதானே? ராமநாம மந்திரத்தின் மகிமையை அனைவருக்கும் புரியவைத்து விட்டீர், அல்லவா? என்று புகழ்ந்துரைத்தார் ராஜரிஷி. எல்லாம் அந்தக் கேசவன் செயல், நம் கையில் என்ன இருக்கிறது? நாராயண, நாராயண! என்றவாறு விண்வெளியில் ஏகினார் நாரதர்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar