பதிவு செய்த நாள்
05
ஜன
2018
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால உற்சவம், வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா, 10 நாட்கள் நடப்பதுண்டு. அதன்படி காலை 7.35மணிக்கு அண்ணாமலையார் கோவில் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள, 72 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் மேளதாளம் முழங்க கோவிலின் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டனர். விழாவையொட்டி, 10 நாட்கள் காலை, மாலை இரு வேளையும் சந்திரசேகரர் மேளதாளம் முழங்க மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.