பதிவு செய்த நாள்
08
ஜன
2018
02:01
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சுவாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொணமங்கலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று பார்வையிட்டார். பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கவர்னர் கலந்துரையாடல் செய்தார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டார். திண்டிவனம் சப் கலெக்டர் மெர்சி ரம்யா, டி.எஸ்.பி., (பொறுப்பு) ரவிச்சந்திரன், தாசில்தார் கீதா, சிருஷ்டி பவுண்டேஷன் மாற்றுத் திறனாளிகள் பள்ளி இயக்குனர் கார்த்திகேயன், செயலாளர் லட்சுமிகார்த்திகேயன், மேலாளர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், கவர்னர் கிரண்பேடி, மயிலத்தில் பிரசித்தி பெற்ற முருகர் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தார். கவர்னர் வருகையையொட்டி, மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.