காய்ச்சிய பாலை அபிஷேகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. அக்கினி தீண்டிய எதுவும் அபிஷேகத்துக்கு உரியது இல்லை. அக்னியால் சமைக்கப்பட்டவையாவும் நைவேத்தியமாக படைக்கலாமே தவிர அபிஷேகத்துக்கு பயன்படுத்துவது அபசாரமானது, நாதத்தின் வடிவாக உள்ள இறைவனைப் பூஜையின்போது மணியடித்து வணங்குகிறோம். தீய அதிர்வுகைள விலக்கவும், நல்ல அதிர்வுகளைக் கொண்டுவரவும், உலோக மணிகளின் சத்தம் உதவும். பூஜா காலத்தை தவிர, மற்ற நேரங்களில் மணி அடிக்கக் கூடாது. அதேபோல் மணியைத் தரையில் வைப்பதும் தவறு.