Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசை : ராமேஸ்வரத்தில் திரண்ட ... தேவிபட்டினத்தில் பக்தர்கள் புனித நீராடல் தேவிபட்டினத்தில் பக்தர்கள் புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் மட்டுமே ஆடிப்பாடி கொண்டாடிய காணும் பொங்கல்
எழுத்தின் அளவு:
பெண்கள் மட்டுமே ஆடிப்பாடி கொண்டாடிய காணும் பொங்கல்

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
11:01

ஈரோடு: ஈரோட்டில், பெண்கள் மட்டுமே கொண்டாடும், காணும் பொங்கலில், இளைஞிகள் முதல், வயதான பெண்கள் வரை, ஆடிப்பாடி, பொழுது போக்கி மகிழ்ந்தனர். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில், பெண்கள் மட்டுமே கொண்டாடும், காணும் பொங்கல், ஈரோட்டில் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈரோடு மட்டுமின்றி சுற்றியுள்ள பள்ளிபாளையம், பவானி, விஜயமங்கலம், பெருந்துறை பகுதிகளில் இருந்தும், காணும் பொங்கல் தினமான நேற்று, விழா நடக்கும், வ.உ.சி., பூங்காவுக்கு படையெடுக்கத் தொடங்கினர். பலர், வீடுகளில் இருந்து உணவு பண்டங்களை எடுத்து வந்தனர். உறவினர்கள் மற்றும் தோழியருடன் பகிர்ந்துண்டனர். இளம்பெண்கள், சிறுவர், சிறுமியர் வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி, விளையாடினர். கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும், இசைக்கு ஏற்றவாறு நடனமாடி மகிழ்ந்தனர். கடந்த ஆண்டுகளில் நடந்த, காணும் பொங்கல் நினைவுகளை, பகிர்ந்து கொண்டனர். இதில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, தை அமாவாசை நாளில், காணும் பொங்கல் வந்ததால், கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar