பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று காணும் பொங்கலையொட்டி, கரிநாள் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு சிறப்பு யாகமும், அதனைத் தொடர்ந்து விநாயகர், ராஜ ராஜேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. கோவில் சுற்றுப்பகுதியில் பரிவார மூர்த்திகள் மற்றும் சிவலிங்கங்கள், சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10:30 மணிக்கு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் மயில் வாகனத்திலும் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக் குழவினர் செய்திருந்தனர்.