காரைக்கால் : தை அமாவாசையை முன்னிட்டு, கடற்கரையில் நித்திய கல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தை அமாவாசையை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட கடற்கரையில் நேற்று காலை ஏராளமா னோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.தொடர்ந்து, கடற்கரை யில் எழுந்தருளிய நித்திய கல்யாண பெருமாள் மற் றும் கைலாசநாதர் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து, நித்திய கல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் சுவாமிகள் கடற்கரை சாலை, நேரு வீதி, மாதா கோவில், பாரதியார் சாலை வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.