Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் செய்தி எதிரொலி: ... ஊர் கூடி உச்சி மலையில் நடத்திய திருவிழா ஊர் கூடி உச்சி மலையில் நடத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முயல் விடும் விழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
11:01

அரூர்: அரூர் அருகே, பொங்கல் விழாவை முன்னிட்டு, முயல் விடும் விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது.  தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குடுமியாம்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரம்பரியமாக முயல் விடும் விழா நடைபெறுவது வழக்கம்.

Default Image
Next News

இந்தாண்டு முயல் விடும் நிகழ்ச்சிக்காக, நேற்று காலை, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், ஊரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று, சுவாமியை வழிபட்டனர். பின், கோவிலில் இருந்த வலைகளை எடுத்துக் கொண்டு, முயலை பிடிக்க வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு வலை மூலம் ஒரு முயலை பிடித்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு, கோவில் அருகில் பெண்கள் பொங்கல் வைத்த பின், பெரிய மாரியம்மன், வேடியப்பன் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை நடந்தது.  இதையடுத்து, காட்டிலிருந்து பிடித்து வந்த முயலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்து, சுவாமியை சுற்றி, மூன்று முறை வலம் வந்த பின், சிறிது துாரம் சென்று முயலை விட்டனர். அது துள்ளி குதித்து, வனப்பகுதியை நோக்கி ஓடியது. விழாவில், அச்சல்வாடி, ஒடசல்பட்டி உட்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.  

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த, மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, முயல் விடும் விழா நடத்தி வருகிறோம். விழாவின் போது விடப்படும் முயலை யாராவது பிடித்தால், அவர்களுக்கு ஊர் பஞ்.,ல் அபராதம் விதிக்கப்படும். ஊர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டி, பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை, முயல் விடும் விழா நடந்தது. இதை காண, ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar