பதிவு செய்த நாள்
18
ஜன
2018
11:01
ஆர்.கே.பேட்டை: நீண்ட நாட்களாக இதற்காகவே காத்திருந்தது போல், பொதட்டூர்பேட்டை மக்கள், மலைச்சுற்று திருவிழாவில், குதுகலமாக பங்கேற்று, ஆரவாரித்தனர். மலைக்கோவிலில் சங்கமித்த பக்தர்கள் கூட்டம், சுவாமி தரிசனத்திற்கு பின், கோவில் வளாகத்தில், பாறை முகடுகளில் அமர்ந்து, நட்பு பாராட்டினர். பொதட்டூர்பேட்டையில் பாரம்பரியமாக நடைபெறும் திருவிழாக்களில், காணும் பொங்கல் மலைச்சுற்றும் ஒன்று. திரவுபதியம்மன திருவிழா, ஜாத்திரை இவற்றுக்கு இணையாக சிறப்பாக கொண்டாடப்படும் காணும் பொங்கல் திருவிழாவில், ஆறுமுக சுவாமி மலைக்கோவிலில் சிறப்பு உற்சவம் நடைபெறும். 78ம் ஆண்டாக நடந்த விழாவில், பொதட்டூர்பேட்டை, ஆர்.கே. பேட்டை, சொரக்காய்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஒரே இடத்தில் சந்திப்பு: இது தவிர, பொதட்டூர் பேட்டையை பூர்வீகமாக கொண்டு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும், இந்த விழாவில் பங்கேற்க
வந்திருந்தனர். எல்லா நண்பர்களையும், சுற்றத்தினரையும் ஒரே இடத்தில் சந்திக்க, இந்த விழா ஒரு வாய்ப்பாக அமைவது தான் இதன் சிறப்பு. காணும் பொங்கல் அன்று மாலை ஆறுமுகசுவாமி மலைக்கோவிலில், சுவாமி தரிசனத்திற்கு பின், மலை உச்சியில், பாறை முகடுகளில் அமர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசுவது வழக்கம். மாலை பொழுதில், மங்கலான சூரிய ஒளியில், சத்தம் இல்லாத சூழலில், சுத்தமாக காற்று தழுவிச் செல்ல, அங்கேயே சுட சுட தயாரித்து விற்பனை செய்யப்படும் வடை, போண்டா உள்ளிட்டவற்றை சுவைக்க, ஆண்டில் இந்த ஒரு நாளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதை தவறாமல் அனுபவித்து மகிழ, கூட்டம் எங்கிருந்து தான் வருமோ தெரியாது.
பார் வேட்டை: அடிவாரத்தில் உள்ள கோவிலில் இருந்து, இரவு 8:00 மணியளவில், அகத்தீஸ்வரர், விநாயகர், ஆறுமுக சுவாமி உற்சவ மூர்த்திகள், பார் வேட்டைக்கு புறப்பாடு செய்தனர்.திரவுபதியம்மன் கோவில் முதல் பேருந்து நிலையம் வரையிலாக, சுவாமிகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
களையிழந்த சுனைகள்: மலையடிவாரம் மற்றும் மலைப்பாதையின் நடுவே என, இரண்டு சுனைகள் உள்ளன. சில ஆண்டுகளாக இவை வறண்டு கிடப்பது க்தர்களிடையே, வேதனையை ஏற்படுத்திஉள்ளது. சுனைகளில் ண்ணீர் இல்லாததால், மலைப்பாதையில் சுண்டல், ற்பனை செய்பவர்களுடன், வாட்டர் பாக்கெட் விற்பனையாளர்களையும் காண முடிந்தது. ம லைக்கோவிலுக்கு, பேரூராட்சி ார்பில் ண்ணீர் வசதி ஏற்படுத்த பக்தர்கள் ரிக்கை விடுத்துள்ளனர்.