பதிவு செய்த நாள்
18
ஜன
2018
11:01
குளித்தலை: கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர், கோவில் மாடுகளுடன் வந்து, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரரை வணங்கி, தேவராட்டம் ஆடினர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, கள்ளை, வில்லுகாரன்பட்டி, தேசியமங்கலம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் நேற்று முன்தினம் குவிந்தனர். தங்கள் கோவில் மாடுகளுடன் வந்த அவர்கள் சுவாமியை வழிபட்டனர். பின், கோவில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின், மாலையில், மலையடிவாரத்தில், 500க்கும் மேற்பட்டோர், கால்களில் சலங்கை கட்டி, உருமி மேளம் இசைத்து, பாரம்பரிய நடனமான தேவராட்டம் ஆடினர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இதை கண்டுகளித்தனர்.