மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி முகூர்த்தக்கால் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2018 11:01
தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவுக்காக நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஞ்சளாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு மூடப்பட்ட கதவிற்கு பூஜை செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் அணையா நெய்விளக்கு எரிகிறது.மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா பிப்., 13 ல் துவங்கி பிப். 17 வரை நடக்கிறது. இதற்காக நேற்று காலை சிறப்பு அபிேஷகம், ஆராதனை செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. இவ்விழாவில் தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி உட்பட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கனகராஜ்பாண்டியன், தனராஜ்பாண்டியன் மற்றும் நிர்வாக அதிகாரி சந்திரசேகர் செய்திருந்தனர்.