திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் அத்யயன உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2018 12:01
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ தாயார் அத்யயன உற்சவத்தை முன்னிட்டு‚ புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் சயன அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ தாயார் அத்யயன உற்சவத்தின் 10ம் நாளான, கடந்த 22ம் தேதி காலை 11:30 மணிக்கு, புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், கண்ணாடி அறையில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு‚ ஊஞ்சலில் தாயார் பெருமாள் சேத்தியாக அருள்பாலித்தனர். இரவு 8:30 மணிக்கு‚ விசேஷ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு‚ கண்ணாடி அறையில் பெருமாள், தாயார் சயன அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கடந்த 23ம் தேதி காலை 8:00 மணிக்கு சயன அலங்காரத்தில் இருந்து எழுந்து சிறப்பு அலங்காரத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.