பதிவு செய்த நாள்
25
ஜன
2018
12:01
சின்னாளபட்டி, சின்னாளபட்டி பாரம்பரிய சந்துமாரியம்மன் விழாவில், அம்மன் அழைப்பிற்காக ஏராளமானோர் பிருந்தாவன தோப்பில் குவிந்தனர். சின்னாளபட்டியில் பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காலரா பாதிப்புக்கு தீர்வு கிடைத்ததால், 60 ஆண்டுகளுக்கு மேலாக, தெருக்கள் தோறும் தனித்தனியே மாரியம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தாண்டு சந்து மாரியம்மன் திருவிழா, 50க்கும் மேற்பட்ட தெருக்களில் நடக்கிறது. முன்னதாக, அண்ணா நகர், கலைஞர் காலனி, பாரதிநகர், சோமசுந்தரம் காலனி, தென்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முளைப்பாரியுடன் மெயின்ரோட்டில் உள்ள பிருந்தாவன தோப்பிற்கு மக்கள் சென்றனர். தெருக்கள் வாரியாக, பெண்கள் முளைப்பாரி வைத்து, கும்மி அடித்தனர். அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம், அழகர் கோயிலை வலம் வந்து ஊர்வலம் துவங்கியது. சிலர், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து தெருக்களிலும், ஊர்வல பாதை முழுவதும் மா, வேப்பிலை தோரணங்களுடன், பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொங்கல் வழிபாட்டுடன், போட்டிகள் நடந்தது.