செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரத ஸப்தமியை முன்னிட்டு ஒரே நாளில், 7 வாகனங்களில் ரங்கநாதர் மாட வீதிகளில் உலா நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், நேற்று ரத ஸப்தமி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு காலையில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து மாட வீதிகள் வழியாக காலை 6:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணிவரை சாமி வீதி உலா நடந்தது. காலை 6 :00 மணிக்கு சூரிய பிரபை, 8:00 மணிக்கு சேஷவாகனம், 10:00 மணிக்கு கருட சேவை, 12:00 மணிக்கு குதிரை வாகனம், மதியம் 1:00 மணிக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், 2:00 மணிக்கு அனுமந்த வாகனம், மாலை 4:00 மணிக்கு யானை வாகனம், 6:00 மணிக்கு சந்திர பிரபையிலும் சாமி வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் சிங்கவரம் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.