பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி, தேர் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி எனும் பெயரில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், அறுபடை வீடுகளில் முதன்மை வீடான பழநிக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது. அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, செவ்வாய் போன்ற தினங்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல், தைப்பூச தினத்தன்று ஒருவாரம், தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், காவடி எடுத்துவந்து, மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன்படி, வரும், 31ல் தைப்பூச தேர்த்திருவிழா நடக்க இருக்கிறது. தேர் அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.