பதிவு செய்த நாள்
27
ஜன
2018
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள, கம்பத்து இளையனார் சன்னதியில், தை கிருத்திகையை முன்னிட்டு, 504 காவடி ஏந்தி, மாட வீதி வலம் வந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த தலமான, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள, கம்பத்து இளையனார் சன்னதியில், தை கிருத்தியை முன்னிட்டு, அதிகாலை கோவிலில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து அறுபடை முருக பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி என பல்வேறு வகையான, 504 காவடிகளை ஏந்தி மாட வீதியில் வலம் வந்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.