காளிப்பட்டி: தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டின் முதல் கிருத்திகையான நேற்று, மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் கந்தசாமிக்கு சிறப்பு அபி ?ஷகம் நடத்தி பலவண்ண மலர் மாலை, அலங்காரத்தில் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தை கிருத்திகை, குடியரசு தினமான விடுமுறை தினத்தில் வந்ததால், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.