பதிவு செய்த நாள்
27
ஜன
2018
12:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அம்மன் கோவில் ஆராதனை விழாவில், குத்துவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி போலீஸ் லைன், காமாட்சி அம்மன் மற்றும் தேவாதி அம்மன் கோவில், ஒன்பதாம் ஆண்டு ஆராதனை விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, 24 மனை தெலுங்கு செட்டியாளர் சங்கத்தின் சார்பில், காட்டுவீர ஆஞ்சநேயருக்கு 1,008 வடமாலை சாத்துதல், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, காமாட்சி அம்மனுக்கு யாக பூஜை, மாவிளக்கு பூஜை நடந்தது. மாலையில் சுமங்கலி பூஜை, 151 திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, ராயக்கோட்டை சாலையில் உள்ள, தேவாதி அம்மனுக்கு சக்தி பூஜை நடக்கவுள்ளது.