கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன் கோவிலில், திருக்கல்யாண விழா விமர்சையாக நடந்தது. திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. சிவன், பார்வதி அம்மையாருக்கு மாலை மாற்றுதல், நலங்கு வைத்தல், ஊஞ்சலாடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியாக, மேள, தாளங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.