பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
அன்னுார்: மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் தேரோட்டம், இன்று நடக்கிறது.’மேலைத்திருப்பதி’ என்றழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில், பழமையானது.இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நடக்கும் திருவிழாவில், பல மாவட்டங்களிலிருந்து பல லட்சம் பேர் பங்கேற்பர். இங்கு, 54ம் ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன், 24ம் தேதி துவங்கியது. 28ம் தேதி வரை தினமும், காலை மற்றும் இரவு சுவாமி திருவீதியுலா நடந்தது. 28ம் தேதி காலையில் அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு, வெங்கடேசப் பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. தேரோட்ட வீதிகளில் வலம் வந்து, மாலையில் நிலையை அடைகிறது. அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், சுற்றுவட்டார மக்கள் பங்கேற்கின்றனர். மதியம் அன்ன தானம் வழங்கப்படுகிறது. நாளை மதியம் பரி வேட்டையும், பிப். 1ம் தேதி இரவு தெப்பத்திரு விழாவும் நடக்கிறது.