பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
மேட்டுப்பாளையம்:சூரிய கிரகணத்தை அடுத்து, குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், நாளை காலையில் தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது.காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த, 25ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இன்று காலை திருக்கல்யாண உற்சவமும், இரவு, 10:00 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலாயுத சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். அன்று காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.நாளை மாலை, 4:00 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி இரவு, 10:00 மணி வரை நீடிக்கிறது. அதனால் தேரோட்டம் காலையிலேயே நடை பெறுகிறது. தைப்பூசத் தேர்திருவிழாவை முன்னிட்டு, குருந்தமலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட உள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் (பொ) பெரியமருதுபாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.