பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2018 11:01
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பழநி தைப்பூசவிழா ஜன.,25ல் துவங்கி பிப்.,3வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று பெரிய நாயகியம்மன் கோயில் மேற்குவெளிப் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். இரவு 8.30மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்து குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் இரவு 9.30மணிக்கு வெள்ளிரதத்தில் திருஉலா வந்தார், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.