உடுமலை: உடுமலை, காந்தி நகர் வரசித்தி விநாயகர் கோவிலில் ருத்ராபிேஷக சிறப்பு பூஜை நடந்தது.வரசித்தி விநாயகர் கோவிலில், ருத்ராபிேஷக விழாவையொட்டி, சிவபெருமானுக்கு, 11 திரவியங்களால், 11 சிவாச்சாரியார்கள் ருத்ர யாகம் நடத்தினர். திரளான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்றனர்.