பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூரில், சமயபுரம் மாரியம்மனுக்கு, ஏழாமாண்டு சீர் வழங்கும் விழா, நேற்று நடந்தது. அதையொட்டி, மாலை, 6:30 மணிக்கு, அக்ரஹாரம், லட்சுமி கோபால சுவாமி ஆலயத்திலிருந்து, சீர்வரிசை பொருட்களுடன், ஏராளமான பெண்கள், மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர். அங்கு, அம்மனுக்கு பூஜை நடந்தது.