விழுப்புரம், : அரசமங்கலத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், திருநட்சத்திர வைபவ மகோற்சவம் நடந்தது. அரசமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி நாயகா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், 34வது ஆண்டு திருநட்சத்திர வைபவ மகோற்சவம் நேற்று நடந்தது. விழாவை யொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதம், 5:30க்கு ஸ்ரீ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு, 8:30க்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. இதனை தொடர்ந்து 10:30 மணி முதல் பகல் 12:30 வரை, உலக நன்மை வேண்டி ஸ்ரீ லட்சுமி மகா சுதர்சன ேஹாமம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோவிந்தபுரம் விட்டல்தாஸ் சுவாமிகளின் சீடர்கள் பங்கேற்ற பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வெங்கடேஷ்பாபு, பட்டாச்சாரியார் கிருஷ்ணராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.