பழநி: நேற்று தைப்பூசத்தன்று சந்திரகிரகணம் என்பதால் நடை சாத்தப்படுவதற்கு முன்னதாக, பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விடிய விடிய காத்திருந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று மாலையில் சந்திரகிரகணம் என்பதால், பகல் நேர பூஜைக்குபின் மதியம் 3:45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனால் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில் உள்ளிட்ட மலைக்கோயிலுக்கு செல்லும்வழிகளில் விடிய விடிய காத்திருந்தனர். கும்பாபிஷேக நினைவரங்கம் வழியாக சென்று யானைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட தடுப்புகளில் 20 நிமிடங்களை வரை பக்தர்களை நிற்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மலைக்கோயிலுக்கு அனுப்பியதால் 6 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் துபாய், ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.