பதிவு செய்த நாள்
01
பிப்
2018
01:02
மயிலம் : மயிலம் முருகர் கோவிலில் தை பூச விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் தைபபூச விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள அக்னி குளக்கரையில் உள்ள சுந்தரவிநாயகர் கோவலில் சிறப்பு வழிபாடு நடந்தது.பகல் 12:00 மணிக்கு, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு, உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி செய்திருந்தார்.
விழுப்புரம்: விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்திய டிரஸ்ட் சார்பில், தைப்பூச விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு ஜோதி தரிசனம் துவங்கியது. இதில், வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் அண்ணாமலை, கலியபெருமாள், நாகராஜன், ரங்கநாதன், பலராமன், பாரதி, ராமலிங்கம், சக்திவேல், சீத்தாரமன், ராஜபூபதி, சரவணபவன் மற்றும் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது. லக்கிநாயக்கன்பட்டியில் விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில், சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு, பசு மற்றும் காளை மாடுகளுக்கு பூஜை செய்தனர்.
செஞ்சி: செஞ்சியில் அருட்பிரகாச வள்ளலார் அறக்கட்டளை சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு, அன்னை தெரசா முதியார் இல்லத்திற்கு காலை, மதிய உணவு வழங்கினர். மதியம் 1:00 மணிக்கு திருவண்ணாமலை சாலையில், அன்னதானம் வழங்கினர். அறக்கட்டளை தலைவர் தணிகாசலம் தலைமை தாங்கினார். மனவளக்கலை மன்ற தலைவர் பாண்டியன், வள்ளலார் அறக்கட்டளை துணை தலைவர் சக்தி கணேஷ் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கண்ணதாசன் அன்னதானத்தை துவக்கி வைத்தர். தொழிலதிபர் தனபால் மற்றும் ரங்கநாதன், சீனுவாசன், மாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலை சுப்பிரமணியர் கோவிலில், நேற்று காலை 9:30 மணிக்கு, சக்திகரக் ஊர்வலமும், பகல் 12:30 மணிக்கு குருசாமி திருமுருகனுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும், மதியம் 2:00 மணிக்கு தீ மிதித்தல், செடல்உற்சவமும், மதியம் 3:00 மணிக்கு அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி ஆட்டம் நடந்தது.
செஞ்சி தாலுகா, தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. பகல் 12:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி அபிஷேகம் செய்தனர். மதியம்1:00 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகமும், விபூதி அலங்காரமும் செய்தனர் தொடர்ந்து கோவில் குருக்கள் அருட்பெருஞ்ஜோதி சாமியின் மார்பின் மீது மாவு இடித்தலும், அபிஷேகமும் நடந்தது.
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு‚ பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர். மூலவர் வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர்க்கு மகா அபிஷகம்‚ விபூதி அலங்காரம் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது.
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா, அவலுார்பேட்டையில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலிலிருந்து சித்தகிரி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், தீபாரதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வாணை சமேத முருக பெருமானுக்கு தைப்பூச விழா சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதபோல் கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன், இந்திலி பாலசுப்பிரமணியர், நீலமங்கலம் சொர்ணபுரீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.