பதிவு செய்த நாள்
02
பிப்
2018
11:02
குளித்தலை: கடம்பர்கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு, எட்டு கோவில் சுவாமிகள் சந்திப்பு, தீபாராதனை புறப்பாடு நிகழ்ச்சியில், பல ஆண்டுகளுக்கு பிறகு, அதிகளவு மக்கள் கூடினர்.
குளித்தலை, கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூசத்தில், எட்டு கோவில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வர் சுவாமி தூக்கும் பணியாளர்கள் தாமதமானதால், அய்யர்மலை ரத்தின கிரீஸ்வர் பந்தலை விட்டு புறப்பட்டு, இரண்டு மணி நேரம் காத்திருந்தது. பிறகு, திருஈங்கோய்மலை பணியாளர்கள் வந்தவுடன், சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சியும் மற்றும் இரண்டு கோவில் சுவாமிகளுக்கு, தீபாராதனை காட்டப்பட்டு, புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பந்தலை விட்டு புறப்பட்ட சுவாமிகள், பேராளகுந்தாளம்மன் கோவில் முன், திருஈங்கோய்மலை சுவாமியை தவிர, அனைத்து சுவாமிகளும் சந்திப்பு நடந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று நடந்த தைப்பூச விழாவில், அதிகளவு பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.