கோபி: கோபி பச்சமலை முருகன் கோவில், தைப்பூச தேர்த்திருவிழாவை ஒட்டி, நேற்று காலை, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. வள்ளி தெய்வானையுடன், சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில், காட்சியளித்தார். பின் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.