பதிவு செய்த நாள்
03
பிப்
2018
10:02
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலில் காரைக்குடி நகரத்தார் நுாற்றுக்கும் மேற்பட்ட காவடிகள் எடுத்துவந்து பாரம்பரிய வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார், புதுவயல் உள்ளிட்ட செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக குன்றக்குடியில் ஜன.,25ல் பூஜைசெய்து, பழநி தைப்பூச விழாவிற்கு புறப்பட்டனர்.
ஜன.,30ல் வைரவேலுடன் பழநி வந்தடைந்தனர். அவர்களது மண்டபத்தில் வைரவேலுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். தைப்பூசவிழா திருக்கல்யாணம், தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று 300க்கும் மேற்பட்ட காவடிகள், பால்குடங்கள் எடுத்துவந்தனர். அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில்வழிபட்டு, மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தை வலம்வந்து காவடி நேர்த்திக்கடன்செலுத்தி முருகனை தரிசனம்.கடந்த 400 ஆண்டுகளுக்குமேலாக நகரத்தார் செட்டிநாடுபகுதிகளில் பாரம்பரிய வைரவேலுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழநியில் சிறப்புவழிபாடு செய்து காவடி, பால்குடங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துகிறோம்.மீண்டும் பாதயாத்திரையாக ஊர்திரும்ப உள்ளதாக காவடி குழுவினர் தெரிவித்தனர்.