வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் வள்ளலார் தைப்பூச ஜோதியை முன்னிட்டு சதுரகிரி ஆத்மஜோதி லிங்கம்வள்ளலார் நினைவாலயம் சார்பில் சிறப்பு அன்னதானம் நடந்தது. கமிட்டி தலைவர் கூடலிங்கம் துவக்கி வைத்தார்.பொருளாளர் ராமமூர்த்தி வரவேற்றார். இதையொட்டி முத்தாலம்மன் திடலில் வள்ளலார் உருவப்படம் வைத்து சிறப்பு பூஜை, பஜனை, அன்னப்படையல் பூஜை நடந்தது. ஏற்பாடுகளை செயலாளர் காளீஸ்வரன், குருநாதர் மகாநடராஜன், நிர்வாகிகள் மகேந்திரன், மீனாட்சிசுந்தரம் செய்தனர்.