பதிவு செய்த நாள்
03
பிப்
2018
01:02
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, கடந்த, 27ல் காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அன்று இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில், சுவாமி திருவீதி உலா வந்தது. கடந்த, 30ல், பூதவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தது. 31 காலை, 7:00 மணிக்கு, தீ மிதித்தில், காவடி எடுத்தல் மற்றும் மஹா அபி?ஷகம் நடந்தது. மாலை, 3:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு விநாயகர் தேர் ஊர்வலம் நடந்தது. முக்கிய நாளான நேற்று மாலை, 5:00 மணிக்கு மகாரத தேராட்டம் நடந்தது. திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை பகல், 2:00 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சி, வரும், 6ல், பிச்சாண்டவர் உற்சவம் நடக்கிறது.