ராமநாதபுரம்:சகோதரி நிவேதிதை 150வது ரத ஊர்வலம் ராமநாதபுரம் வந்தது.காலை 8:30 மணிக்கு விவேகானந்த பாஸ்கரத்தில் துவங்கிய ரத யாத்திரையை, ராமநாதபுரம் ராமகிருஷ்ண மட தலைவர் சுவாமி சுதபானந்தர் துவக்கி வைத்தார்.9:00 மணிக்கு ராமலிங்கம் விலாசம் அரண்மனையை அடைந்தது. அங்கு ராமநாத சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் குமரன் சேதுபதி, வரவேற்பு குழு தலைவர் ராணி லெட்சுமி குமரன் சேதுபதி வரவேற்றனர்.காலை 9:45 மணிக்கு விவேகானந்தர் ஸ்துாபி அருகே ஞான தீப சேவா சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 10:00 மணிக்கு ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதல்வர் கீதா தலைமையிலும், 11:30 மணிக்கு செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் ராஜாத்தி அப்துல்லா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில், ரதம் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றது.